Friday, February 22, 2008

love mood

திருமணத்திற்குப் பிறகு

காதல் சலித்துவிடுமே......

என்ன செய்வது ???

என அப்பாவியாக கேட்டவளிடம் ,

அப்பா அம்மா விளையாட்டுவிளையாடலாம் என்கிறேன் ...

கிள்ளி விட்டுப் போகிறாள் ....

நான் உனக்கு அப்பவகாவும்...

நீ எனக்கு அம்மவகாவும் உணரபோகும் தருணங்களை

அப்படிச் சொன்னேன் என்றதும்...

ஓடி வந்து கட்டிகொள்கிறாய்...

ஒரு குழந்தையை போல.....

கருத்தும் கவியும் எனக்குச் சொந்தமல்ல ...

Wednesday, January 30, 2008

தினமும்...

காலைப்பணி கதிரவனுடன் எந்தன்
கண்ணுக்குள்ளே.... சண்டையிட.....

இன்றும் .. என் குளியலை
பத்து நிமிட உறக்கதிற்கு
கம்பளியிடம் அடகு வைத்தேன் ..

இனியும் இப்படி இழுத்து மூடினால்..
இன்றைய எந்திர வாழ்க்கயை
இழந்திடுவேனோ....
என்று
கம்பளியின் இடிபாட்டிலிருந்து,
எழுந்து..
கொஞ்சம் மேலே ..
எனை போலே..
மேகத்தை முட்டி எனை எட்டிப்பார்க்கும்
கதிரவனைக்கண்டு சிரித்துக்கொண்டே....

அரை நிமிடத்தில் உருமாறும்
தீபாவளிப் பூச்சட்டியாய்...
அரை மணி நேர
அவசர சிகிச்சை,
என் உடலுக்கு...
அலுவலக அன்பர்களின் நலன் கருதி...

அதி காலையில் அடகு வைத்த குளியல் மூழ்கிவிடடதோ..??
என்று அங்கும் ...இங்கும்..
அங்கமெலாம் அன்னிய இரசாயணம்...
முல்லை முல்லால்
எடுக்கும் எண்ணதில்......